Saturday, July 09, 2005

கடாரம் பற்றி......

கடாரம் என்னும் நாடு தென்கிழக்காசியாவின் முதன்மையான நாடுகளில் ஒன்று. முதன் முதலில் தோன்றிய நாடுகளில் ஒன்று.

அந்த நாடு, தென் தாய்லந்திலிருந்து மலேசியாவின் வட பேராக் மாநிலம் வரைக்கும் பரவியிருந்தது.

கடலால் பாதுகக்காப்பட்ட அருமையான துறைமுகமும் கடற்படைத் தளமும் கொண்டதாக விளங்கியது.

வற்றாத ஜீவநதிகள் பல ஓடின. காட்டுவளமும் மலைவளமும் கடல்வளமும் ஆற்றுவளமும் நிலவளமும் கனிவளமும் நிறைந்த நாடு.

வெள்ளீயம், பொன் ஆகியவை ஏராளமாக அகப்பட்டன. ஒருவகையான முத்துவும் இங்கே ஒரு காலத்தில் கிடைத்தது.

இதனுடைய வளத்தின் காரணமாக உணவுப்பொருட்களை அது பலநாடுகளுக்கும் வழங்கியது. அத்துடன் கைவினைப்பொருட்களும் பலநாடுகளுக்கும் சென்றன.

தமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது. அத்துடன் ஏனைய தென்கிழக்காசிய நாடுகள், காம்போஜம், சம்ப்பா, சீனம் ஆகியவற்றுடனும் ரோமாபுரி, அராபியா, எகிப்து,ஃபினீஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.

பல கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன. பைரவ, பாசுபத சைவமும் சாக்தமும் தழைத்தன. அவற்றுடன் பௌத்தமும் செல்வாக்குடன் விளங்கியது.

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் பாலி ஆகிய மொழிகளைல் பாண்டித்தியம் பெற கடாரத்துக்கு வருவார்கள்.

தமிழகத்தின் பாண்டியர்கள், பல்லவர்கள் சோழர்கள், வங்கத்தின் பாலர்கள், கலிங்கத்தின் கங்கர்கள் முதலிய அரசவம்சங்களுடன் கடாரத்தரசர்களுக்கு தொடர்புகள் இருந்தன.
பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழரின் படையெடுப்புக்கு ஆட்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. மீண்டும் இரண்டாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் ராஜேந்திரன் என்ற இயற்பெயர் பெற்ற முதலாம் குலோத்துங்க சோழரின் தலைமையில் கடாரத்தரசர்களிடையே சமரசம் நிலவும்வண்ணம் ஒரு கடற்படையெடுப்பும் நடந்தது.

ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகக் கடாரம் என்னும் அந்த நாடு இருந்து, பின்னர் 'கெடா' என்னும் சுல்த்தானேட்டின் பகுதியாக மாறியது.

8 Comments:

Blogger சினேகிதி said...

“கடாரம் வென்ற சோழனவன் கப்பலில் சென்ற கடலிதுதான்”

11:05 AM  
Blogger jaisankar jaganathan said...

னன்பா,

னிறய எழுது,

வாழ்த்துக்கள்

5:59 AM  
Blogger Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

2:52 AM  
Blogger அமைதி ரயில் said...

pls visit and give your feedback.

http://peacetrain1.blogspot.com/

7:02 PM  
Blogger siva said...

Kindly let me have more details. Kindly visit http://sivasangu.webs.com

Sivahariharan

3:56 AM  
Blogger siva said...

Kindly visit http://sivasangu.webs.com

3:57 AM  
Blogger Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

6:04 AM  
Blogger Mahalingam said...

கெடாரத்தில் இராசேந்திரச்சோழன் படையெடுப்பு பற்றி என்ன ஆதாரம் கிடைத்திருக்கிறது, கடாரம் என்பது பர்மா என்ற ஒரு தகவலும் உள்ளது. பர்மாவின் ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் இராசேந்திரச்சோழன் படைஎடுப்பு குறிப்பு இருந்ததாக படித்திருக்கிறேன்.

9:00 AM  

Post a Comment

<< Home